நாம் பாரம்பரியமாக ஹோமம், யாகம் செய்து வருகின்றோம். நாட்டிற்கே ஏற்படும் சிக்கலிலிருந்து காக்க யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதே போல் தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்னைகளிலிருந்து விடுபட செய்யப்படுவது தான் ஹோமம். ஹோமங்களின் வகைகள் என்ன அதன் பயன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்…

நம் அன்றாட வாழ்வில் பல தடைகள், சோதனைகளை தாண்டி தான் வெற்றியைப் பெறக் கூடிய சூழல் இருக்கிறது. இருப்பினும் நம்மால் யூகிக்க முடியாத சில தடைகள், திருஷ்டி நம்மை தொடரக்கூடும். அதனால் எதனால் நாம் பின்னடைவு அடைகின்றோம் என தெரியாமல் தவித்து வருவோம். கீழே குறிப்பிட்டுள்ள ஹோமங்களை செய்வதால் நாம் தெய்வ சக்திகள் பெற்று அனைத்திலும் வெற்றி பெற முடியும்.

ஹோமங்களின் வகைகள்

1. கணபதி ஹோமம் (Ganapathi Homam)

காரியங்கள் தடைப்பட்டு வந்தால், அப்போது நாம் கணபதி ஹோமம் செய்ய எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.

2. சண்டி ஹோமம் (Chandi Homam)

பயம் மற்றும் நம் தரித்திரத்தின் காரணமாக பல செயல்கள் தடைப்படும். அதிலிருந்து விடுபட்டு தைரியம் ஏற்பட சண்டி ஹோமம் செய்யலாம்.

3. நவகிரஹ ஹோமம் (Navagraha Homam)

நம் ஜாதகத்தில் பல கிரகங்களின் தோஷம் இருக்க கூடும். அந்த கிரக தோஷங்களை நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் அடைய நவகிரக ஹோமம் செய்வது நல்லது.

4. சுதர்ஸன ஹோமம் (Sudarshana Homam)

நம் பகைவர்களை அழிக்கவும், நமக்கு வேண்டாதவர்கள் வைத்த பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட தீய சக்திகளை அழிக்க சுதர்ஸன ஹோமக் செய்ய, சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

5. ருத்ர ஹோமம் (Rudra Homam)

ருத்திர ஹோமம் செய்ய கோபம் குறைந்து ஆயுள் விருத்தி ஏற்படும்.

6. மிருத்யுஞ்ச ஹோமம் (Mrityunjaya Homam)

மாந்தி கிரகம் சனி பகவானின் மைந்தன் என கூறப்படுகிறது. அதனால் அது அமைந்திருக்கும் இடமும் பாதகத்தை தரக்கூடும். இந்த தோஷத்தை நீக்கவும், பிரேத சாபத்தை நீக்கவும் மிருத்யுஞ்ச ஹோமம் செய்வது நல்லது.

7. புத்திர கமோஷ்டி ஹோமம் (Putrakameshti Homam)

புத்திர பாக்கியத்தை பெற நாம் புத்திர கமோஷ்டி ஹோமம் செய்வது நல்லது.

8. சுயம்வரகலா பார்வதி ஹோமம் (Swayamvara Parvathi Homam)

நீண்ட காலமாக பெண்களுக்கு ஏற்படக் கூடிய திருமண தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும்.

9. ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம் (Sri Gandharva Raja Homam)

நீண்ட காலமாக ஆண்களுக்கு இருக்கும் திருமண தடையை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம் செய்வது நல்லது.

10. லக்ஷ்மி குபேர ஹோமம் (Lakshmi Kubera Homam)

வறுமை நீங்கி செல்வ வளம் அதிகரிக்க, பொருளாதாரம் உயர செய்யப்பட வேண்டியது லக்ஷ்மி குபேர ஹோமம்.

11. தில ஹோமம் (Thila Homam)

சனி பகவானால் ஏற்பட்ட தோஷம், இறந்தவர்களின் சாபத்தால் ஏற்பட்ட பாதிப்பை போக்க தில ஹோமம் செய்வது அவசியம்.

12. ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம் (Pratyangira Homam)

எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை தரவும், உடல் ஆரோக்கிய பிரச்சினை, நோய்களை நீக்கி நலம் பெற ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம் செய்யவும்.

13. ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம் (Brahmahathi Dosha Homam)

தொழில், வியாபாரம், வாழ்க்கையில் இருக்கும் எதிரிகளின் தொல்லைகள், சூழ்ச்சிகளை நீக்கி, எடுத்த காரியங்களில் வெற்றி மேல் வெற்றி பெற ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம் செய்வது நல்லது.

14. கண்திருஷ்டி ஹோமம் (Kan Thirusti Homam)

தீயோர், கெட்ட குணம் படைத்தோரின் கண் திருஷ்டியால் குடும்ப அமைதி குலைதல், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல் நடக்கும். இது போன்ற திருஷ்டி தோஷங்களை விலக்கி, காரியங்களில் வெற்றி பெற கண் திருஷ்டி ஹோமம் செய்வது நல்லது.

15. காலசர்ப்ப ஹோமம் (Kala Sarpa Shanthi Homam)

வாழ்வில் ஏற்படக்கூடிய பல சோதனைகளில் வெற்றி பெறவும், திருமணத் தடை, உத்தியோகத்தில் இருக்கும் தடைகள் நீங்கி சாதனை செய்ய காலசர்ப்ப ஹோமம் நல்லது.

இப்படி ஹோமம் பல வகைகள் உண்டு. ஹோமம் செய்வதால் இறைவனின் அருள் நமக்கு கிடைத்து அந்த தெய்வீக சக்தி மூலம் நாம் நினைக்கும் செயல்களை சரியாக செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கின்றது.