“மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி
நறை சொரி கற்பகப் பொன் நாட்டினதுக் கதிபனாகி
நிறை தனம் சிவகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும்
இறையவன் குருவியாழன் இருமலர்ப் பாதம் போற்றி”

ஜோதிட சாஸ்திரம் சொல்லும் பாடல் பலன்கள்:

மிதுன ராசிக்கு:
இரண்டில் குருவந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி வரும் திரண்ட செல்வமுடன் தேனான வாழ்வமையும் உறவினர்கள் பகைமாறி உற்சாகம் குடிகொள்ளும் குருவின் வழிபாட்டால் கொள்கையுடன் வாழ்ந்திடலாம்.

கன்னி ராசிக்கு:
மன்னவன் பதினொற்றில் வந்து விட்டால் செல்வம் வரும் எண்ணியது நிறைவேறும் எழிலான வாழ்வமையும் அந்நியர்கள் உதவியுடன் அதிசயதக்க தொழிலமையும் மண்ணுலகில் கடல் தாண்டும் வாய்ப்புகளும் உருவாகும்.

விருச்சிகம் ராசிக்கு:
ஒன்பதில் குரு நின்றால் உயர்வுகள் வந்து சேரும் நண்பர்கள் ஒத்துழைப்பால் நலம்யாவும் வந்து சேரும் இன்பத்தின் எல்லைகாணும் இனியதோர் வாழ்வு கிட்டும் பொன்னான தொழில்கள் வாய்க்க புது பாதை அமையும் உண்மை!

மகரம் ராசிக்கு:
ஏழில் குரு வந்தால் இல்லத்தில் அமைதி வரும் வாழ்வில் வசந்தமுடன் வருமானம் பெருகி வரும் சூழும் பகை விலகும் சுற்றம் எல்லாம் பாராட்டும் நாளும் வழிபட்டால் நலம் யாவும் வீடு வரும்!

மீனம் ராசிக்கு:
தேவகுரு ஐந்தில் வந்தால் தேகநலம் சீராகும் ஆவல்களும் நிறைவேறும் ஆதரவும் அதிகரிக்கும் நாவசைத்தால் கேட்பார்கள் நாடெல்லாம் புகழ் பரவும் தாமதித்த திருமணம் தடையின்றி நிறைவேறும்!

குருபகவானால் ஏற்படுகின்ற தோஷத்திற்க்கு பரிகாரம்:
ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் நிற வஸ்திரம் அணிந்து, கொண்டைகடலை மாலை சாற்றி, முல்லை மலர்களாலும் பூஜை செய்து, வழிபட நிவர்த்தியாகும்.