ஜோதிடத்திற்கு ஞானம் மிகவும் முக்கியமானது. ஞானம் என்பது இறைவனின் அருளால் கிடைக்கப் பெரும் ஞாபக சக்தி (நினைவலைகள்). ஞானத்தை அஞ்ஞானம், மெய்ஞானம், விஞ்ஞானம் எனக் கூறலாம்.

(ஞானம்)அஞ்ஞானம்: காண்பது, கேட்பது, சொல்வது ஆகியவற்றால் நாம் கற்று அறிகின்ற அறிவு ஆகும்.

மெய்ஞானம்: நீர், நிலம், நெருப்பு , காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் செயல்களால், உலகத்தின் உண்மைகளை நம் ஆத்மாவில் உணர்வுகளால் உணரப்படுவது, இறைவனால் உணர்த்தப்படுவது மெய்ஞானம் ஆகும்.

விஞ்ஞானம்: அஞ்ஞானத்தாலும்,மெய்ஞானத்தாலும் அறிந்தவைகளை ஒன்று சேர்த்து,செயல்படச் செய்வதாகும். ஆனால் இரண்டும் மீண்டும் தனித்தனியாகப் பிரிந்து தன்னிலை அடைந்துவிடும் என்பது உலகத்தின் நியதி.

“அவனின்றி அணுவும் அசையாது!
குருவின்றி கற்ற கலை நிறையாது!”

ஆகையால் பதினெண் சித்தர்களையும் குருவாக்கி, மலரடி பணிந்து எக்கலையையும் நாம் கற்போமாக!!

பாடல்

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர் அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிகுடியில் வான்மீகரோடு நற்றாள் காசி நந்திதேவர்
பாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேஸ்வரம்
சோதி வைதீஸ்வரன் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங் குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமை காக்கவே.

நவகிரஹங்கள் பற்றிய தகவல்கள்