லக்னத்திலிருந்து 2ம்வீடு, 7ம்வீடு, 8ம்வீடு ஆகியவற்றில் சனி பகவான் இருந்தால் திருமணத்திற்கு தடையை ஏற்படுத்துவர்.

இத்தகைய தோஷத்தை நிவர்த்தி செய்ய, இவரது அதிதேவதையான (ஸ்ரீ சாஸ்தா) ஸ்ரீ ஐயப்பனை, தினந்தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும் (சனிக்கிழமை சிறந்தது).

மேலும் சனிதோஷத்தை நிவர்த்தி செய்ய அருகில் உள்ள சிவன் ஆலயங்களுக்குச்சென்று சனிக்கிழமை தோறும், சனீஸ்வர பகவானுக்கு எள்ளு தானியம் வைத்து, கறுப்பு நிறம் வஸ்திரம் அணிந்து, கருங்குவளை மலர்களால் பூஜை செய்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும்.

18 சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ கருவூரார், நவக்கிரகங்களில் சனீஸ்வர பகவானை பிரதிபலிப்பவர். இவரது படத்தை வைத்து, சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முறைப்படி பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய, ஜாதகத்தில் உள்ள சனி தோஷம் நீங்கி நன்மை கிடைக்கும்.

பதினாறு போற்றிகள்:
1. சிவனே போற்றி!
2. சிவனை பூஜிப்பவரே போற்றி!
3. நாடி யோகியே போற்றி!
4. ஒளி பொருந்தியவரே போற்றி!
5. அவதார புருஷரே போற்றி!
6. இந்திராதி தேவர்களுக்கு ப்ரியரே போற்றி!
7. லோகக்ஷம சித்தரே போற்றி!
8. நடராஜனை பிரதிஷ்டை செய்தவரே போற்றி!
9. யோக மூர்த்தியே போற்றி!
10. ஓம் கம் நம்பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
11. கற்பூரப்ரியரே போற்றி!
12. வேண்டிய வரம் அளிப்பவரே போற்றி!
13. வெட்டை வெளியில் வசிப்பவரே போற்றி!
14. பூவுலகில் சஞ்சரிப்பவரே போற்றி!
15.கருவைக் காப்பவரே போற்றி!
16. ஞானத்தை அளிக்கும் ஸ்ரீ கருவூரார் சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு நிவேதானமாக பச்சைக் கற்பூரம் போட்ட சர்க்கரைப் பொங்கலை வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனையே மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும். இவருக்கு கருநீல வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேடம்.

இவரை முறைப்படி வழிபட்டால்…..
1. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச் சனியால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் அகலும்.
2. வாகனத்தால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் நீங்கும்.
3. பிரம்மஹத்தி தோஷம் அகலும்.
4. புத்திர பாக்கியம் கிடைக்கும்.