ஒரு கருவறையில் ஒன்பது தெய்வங்கள்.....

ஸ்ரீ நவபத்ர மஹாகாளியம்மன் திருக்கோயில், நெரூர்(நெருப்பூர்)

கி.பி. 1012 இல் கரூரை ஆண்டு கொண்டிருந்த முசகுந்தன் சக்கரவர்த்தி அவர்களால் இத்திருக்கோவிலானது கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர்(நெருப்பூர்) என்கின்ற கிராமத்தில், இந்த பூமியில் புண்ணிய நதியான காவேரி நதியின் வடதென் கரையில் கட்டப்பட்டது. கொடுமுடி மற்றும் நெருப்பூர் தவிர காவேரி நதியானது குடகுமலை தலை காவேரி முதல் கடலில் கலக்கும்வரை வேறு எங்கும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லாது. இந்த பெருமை இரண்டு இடங்களுக்கு மட்டும் சொந்தம். இங்கு ஒன்பது தெய்வங்கள் ஒன்றாய் ஒரு கருவறையில் இருந்து அருள் வழங்குகிறார்கள். இது போன்று உலகில் வேறு எங்கும் காணமுடியாது.

இங்கு 18 அடி நீளத்திற்கு மேல் ஸர்ப்ப ரூபத்தில் ஸ்ரீ மஹாகாளி வலம் வந்துகொண்டிருப்பதால் மக்களின் மனதில் அச்சம் குடிகொண்டுள்ளது.

இங்கு காவல் தெய்வமாக அதிகம் சக்தி வாய்ந்த ஸ்ரீ சங்கிலிக்கருப்பணசுவாமி இருக்கிறார்....

ஸ்ரீ சதாசிவ ப்ரமேந்திராள் ஜீவசமாதி அடைய அனுக்கிரகம் அளித்த தெய்வங்கள். இந்த கோவிலில் இருந்து 2 km தொலைவில் அவரது அதிஷ்டானம் உள்ளது. சுமார் 260 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ சதாசிவ ப்ரமேந்திராள் இந்த தெய்வங்களுக்காக பாடிய சுலோகம்

பக்தர்களே! மனதில் நினையுங்கள். நீங்களும் இத்திருத்தலத்திற்கு வந்து அருளைப் பெறுங்கள்.