லக்னத்திலிருந்து 8ம்வீட்டில் சுக்கிரபகவான் இருந்தால் திருமணத்திற்கு தடையை ஏற்படுத்துவர்.

இத்தகைய தோஷத்தை நிவர்த்தி செய்ய, இவரது அதிதேவதையான ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் (இந்திரன்) ஸ்ரீவருண பகவான் ஆகியோரை தினந்தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும். (வெள்ளிக்கிழமை சிறந்தது).

மேலும் சுக்கிரபகவான் தோஷத்தை நிவர்த்தி செய்ய அருகில் உள்ள சிவன் ஆலயங்களுக்குச்சென்று வெள்ளிக்கிழமை தோறும், சுக்கிரபகவானுக்கு, மொச்சை தானியம் வைத்து, பட்டு போன்ற வெண்மை வஸ்திரம் அணிந்து, வெண்தாமரை மலர்களால் பூஜை செய்து, தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும்.

இவரை முறைப்படி வழிபட்டால்…..
களத்திர தோஷம் நீங்கி, திருமணம் நல்ல முறையில் நடக்கும்.