லக்னத்திலிருந்து 2ம்வீடு, 7ம்வீடு, 8ம்வீடு, ஆகியவற்றில் சூரிய பகவான் இருந்தால் திருமணத்திற்கு தடையை ஏற்படுத்துவர்.

இத்தகைய தோஷத்தை நிவர்த்தி செய்ய, இவரது அதிதேவதையான ஸ்ரீசிவபெருமானை தினந்தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும். (ஞாயிற்றுக்கிழமை சிறந்தது)

மேலும் சூரியபகவான் தோஷத்தை நிவர்த்தி செய்ய அருகில் உள்ள சிவன் ஆலயங்களுக்குச்சென்று ஞாயிற்றுக்கிழமை தோறும், சூரிய பகவானுக்கு, கோதுமை தானியம் வைத்து, சிவப்பு (ரத்த நிறம்) வஸ்திரம் அணிந்து, செந்தாமரை மலர்களால் பூஜை செய்து, தீபம் ஏற்றி வழிபட நிவர்த்தியாகும்.

18 சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ தேரையர் சித்தர், நவகிரகங்களில் சூரிய பகவானை பிரதிபலிப்பவர். இவரது படத்தை வைத்து,ஞாயிற்றுக்கிழமை தோறும் தீபம் ஏற்றி முறைப்படி பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. குரு மெச்சிய சீடரே போற்றி!
2. தேரையை அகற்றிய தேரையரே போற்றி!
3. சிவனை பூஜிப்பவரே போற்றி!
4. சங்கடங்களைப் போக்குபவரே போற்றி!
5. சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி!
6. சாந்த சொரூபரே போற்றி!
7. நோய் தீர்க்கும் மருந்தே போற்றி!
8. ஞானம் அளிக்கும் ஞானியே போற்றி!
9. சித்த சுத்தியுடையவரே போற்றி!
10. சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி!
11. குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி!
12. வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
13. துக்கத்தைப் போக்குபவரே போற்றி!
14. கண் ஒளி தந்த கருணையே போற்றி!
15. குறை தீர்க்கும் நிறையே போற்றி!
16. பாண்டியன் கூன் நிமிர்த்திய தேரையரே போற்றி! போற்றி!
அர்ச்சனை செய்தவுடன், மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.

நிவேதனம்: மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவை.

இவரை முறைப்படி வழிபட்டால்…..
ஜாதகத்தில் சூரிய கிரஹத்தால் ஏற்படும் தோஷம் அனைத்தும் விலகி, திருமணத் தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.